வாசிப்புக் குழுக்கள்
மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை ஆசிரியர்கள் எளிதாகத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சமே வாசிப்புக் குழுக்கள் ஆகும். மாணவர்களுடன் சேர்ந்து விர்ச்சுவல் வாசிப்புக் குழுவை ஆசிரியர்கள் உருவாக்கலாம். மாணவர்களின் வாசிப்பு நேரம், வாசிப்பின் வேகம், மிகப் பிரபலமான கதைகள் போன்ற பல வாசிப்புச் செயல்பாடுகளை இதன் மூலம் அவர்கள் பார்க்கலாம். வாசிக்காத அல்லது வாசிப்பதற்குச் சிரமப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவும் வகையில் பயிற்சிப் பாடங்களை ஆசிரியர்கள் பகிரலாம். மாணவர்கள் சிறந்த வாசிப்பாளர்களாக மாறுவதற்கு ஆசிரியர்கள் இந்த அம்சத்தின் மூலம் உதவலாம்.
கல்வியாளர்களுக்கான கையேடு
Read Along மூலம் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் வாசிக்கக் கற்றுக் கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் உங்கள் மாணவர்களுக்கு உதவுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் தூண்டும். (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது)
உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம்
உங்கள் மாணவர்களிடம் Read Along ஆப்ஸை அறிமுகப்படுத்திய அனுபவத்தையோ பிற பரிந்துரைகளையோ பகிர விரும்பினால், நாங்கள் ஆவலுடன் கேட்கக் காத்திருக்கிறோம். readalong@google.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்