மேலும் காட்டு

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவிற்கான திட்ட இலக்கு

இந்திய அரசின் கல்வி அமைச்சகம் 2021ல் 'புரிதலுடன் வாசித்தல் மற்றும் எண்ணறிவுத் திறன்களை அதிகரிப்பதற்கான தேசிய முன்னெடுப்பு' (National Initiative for Proficiency in Reading with Understanding and Numeracy - NIPUN Bharat) திட்டத்தை அறிவித்தது. 2026-27ம் ஆண்டிற்குள் 3ம் வகுப்பைப் படித்து முடிக்கும், நாட்டிலுள்ள அனைத்துச் சிறுவர்களும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களை (Foundational Literacy and Numeracy - FLN) பெறுவதை உறுதிசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

திட்டத்தின் இலக்குகள்

புரிதலுடன் வாசித்தல்.

எழுதுதல்.

அடிப்படை கணிதத்தைக் கற்றுக்கொள்ளுதல்.

அடிப்படை வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ளுதல்.

Read Along ஆப்ஸின் பலன்கள்

மாநில அரசுகள் தங்களின் FLN இலக்குகளை அடைய உதவக்கூடிய Read Along அம்சங்கள்

ஆப்ஸிலுள்ள அசிஸ்டண்ட்டான தியா, சிறுவர்கள் வாசிக்கும்போது கவனித்துக் கேட்கும், அவர்கள் வாசிப்பதற்குத் தடுமாறினால் உதவும். அத்துடன் சிறுவர்கள் நன்றாக வாசிக்கும்போது அவர்களை ஊக்கப்படுத்தும்.

வாசிக்கும்போது சிறுவர்கள் ஸ்டார்களையும் பேட்ஜ்களையும் பெறலாம். இது அவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும்.

இந்த ஆப்ஸ் ஆஃப்லைனிலும் இயங்கும். 1GB RAM உள்ள ஆரம்பநிலை ஸ்மார்ட் ஃபோன்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.

ஆங்கிலத்திலும் ஏழு இந்திய மொழிகளிலும் (இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, உருது ஆகியவை) கிடைக்கிறது.

மாநிலம், வட்டம் மற்றும் மாவட்ட அளவில் ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் இதை எளிதில் விரிவுபடுத்தவும் செயல்படுத்திக் கண்காணிக்கவும் முடியும்.

மாநில அரசுகள் தங்களின் அடிப்படை எழுத்தறிவு இலக்குகளை அடைய Read Along ஆப்ஸ் உதவும்.

NIPUN Bharat மற்றும் Read Along

கடந்த சில ஆண்டுகளாக, பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அவர்களது எழுத்தறிவும் எண்ணறிவும் மிகக் குறைவாகவே உள்ளது. மாணவர்களது வாசிப்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்களை மேம்படுத்தும் வகையில் Read Along ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை எழுத்தறிவு இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவும்.

PDF ஃபைலைப் பதிவிறக்கு

*இந்த PDF ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் ஒரு டேப்லெட்டைப் பகிர்ந்துகொண்டு Read Along ஆப்ஸைப் பயன்படுத்திப் படிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

உத்தரப் பிரதேசம் குறித்த கேஸ் ஸ்டடி

கோவிட் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்த சூழல்களிலும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க Read Along ஆப்ஸ் எவ்வாறு உதவியது எனப் பாருங்கள்.

PDF ஃபைலைப் பதிவிறக்கு

*இந்த PDF ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தினசரிப் படித்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அம்மாநில மாணவி ஒருவர் Read Along ஆப்ஸைப் பயன்படுத்தி கதை படிக்கிறார்.

Read Along ஆப்ஸின் ஒருங்கிணைப்பு

Read Along ஆப்ஸ் ஏற்கெனவே மூன்று மாநில அரசுகளின் திட்டங்களில் உள்ளது

உத்தரப் பிரதேச மாநில அரசின் சின்னம்

உத்தரப் பிரதேசம் - பிரேர்னா திட்டம்

2022க்குள் சிறுவர்கள் அடிப்படை எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவதை உறுதிசெய்ய முதன்மை FLN திட்டம் தொடங்கப்பட்டது

தெலங்கானா மாநில அரசின் சின்னம்

தெலுங்கானா

கோவிட் காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆரம்பநிலை வகுப்புகளில் உள்ள சிறுவர்களின் படிப்பு தடைபட்டது. அதைச் சரிசெய்து அவர்களின் எழுத்தறிவையும் எண்ணறிவையும் அதிகரிக்க இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது

குஜராத் மாநில அரசின் சின்னம்

குஜராத்
சாத்தே வாஞ்சியே

மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாநிலப் பாடப்புத்தகங்கள் Read Along ஆப்ஸில் கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

கூட்டாளராகச் சேர, readalong@google.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்