மேலும் காட்டு

வாசிப்புக் குழுக்கள்

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை ஆசிரியர்கள் எளிதாகத் தெரிந்துகொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய அம்சமே வாசிப்புக் குழுக்கள் ஆகும். மாணவர்களுடன் சேர்ந்து விர்ச்சுவல் வாசிப்புக் குழுவை ஆசிரியர்கள் உருவாக்கலாம். மாணவர்களின் வாசிப்பு நேரம், வாசிப்பின் வேகம், மிகப் பிரபலமான கதைகள் போன்ற பல வாசிப்புச் செயல்பாடுகளை இதன் மூலம் அவர்கள் பார்க்கலாம். வாசிக்காத அல்லது வாசிப்பதற்குச் சிரமப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவும் வகையில் பயிற்சிப் பாடங்களை ஆசிரியர்கள் பகிரலாம். மாணவர்கள் சிறந்த வாசிப்பாளர்களாக மாறுவதற்கு ஆசிரியர்கள் இந்த அம்சத்தின் மூலம் உதவலாம்.

ஒவ்வொரு நாளும் சிறந்த வாசிப்பாளர்களை உருவாக்குங்கள்

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தில் ஏற்படும் முன்னேற்றத்தைத் தெரிந்துகொண்டு அவர்களை ஒவ்வொரு நாளும் சிறந்த வாசிப்பாளர்களாக்க உதவுவதற்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட வாசிப்புக் குழுக்கள் அம்சத்தைப் பயன்படுத்துங்கள்.

கல்வியாளர்களுக்கான கையேடு

Read Along மூலம் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் வாசிக்கக் கற்றுக் கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் உங்கள் மாணவர்களுக்கு உதவுங்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் தூண்டும். (ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது)

கையேட்டைப் பதிவிறக்கு கையேட்டைப் பதிவிறக்கு

*இந்த PDF ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.